ஆப்கான் விக்கெட் காப்பாளருக்கு 6 ஆண்டுகள் தடை

By T. Saranya

11 May, 2020 | 02:50 PM
image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான ஷபியுல்லா ஷபிக் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதால் அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயதான ஷபியுல்லா ஷபிக், ஆப்கானிஸ்தான் அணிக்காக 24  சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி  2 அரைச்சதம் உட்பட 430 ஓட்டங்களையும் 46 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் 494 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இவ் கடைசியாக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார்.

கடந்த ஆண்டு நடைபற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் 20 கிரிக்கெட் போட்டியின்போது  ஷபியுல்லா ஷபிக், சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட முயற்சித்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போது, 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கிலும் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து,  அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் 4 வகையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை அவரும் ஒப்புக்கொண்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு கிரிக்கெட் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 6 ஆண்டுகள் தடை விதித்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right