வர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இதன் பிரகாரம், 60 கோடி ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பண சலவை சட்டத்தின் கீழ் இன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட அவரை, 

எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் முன்னர் இவரை ஆஜர்ப்படுத்தியபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.