அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம் என்ன வாக்குறுதிகளை வழங்கியதோ அதை அவ்வாறே நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களை ஏமாற்றி மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
அரசியல் கைதிகளின் விடுதலையை எப்போது அரசாங்கம் உறுதிப்படுத்தும் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிப்புகளை மேற்கொண்டுவரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மோசமான அரசியல் செயற்பாடுகள் காரணமாக இந்த நாட்டில் பலமான இனவாத முரண்பாடுகளே உருவெடுத்தன.
யுத்தத்தை வெற்றிகொண்டதாக கூறிக்கொண்டு நாட்டில் இனவாத செயற்பாடுகளை மட்டுமே இவர்கள் பரப்பினர். வடக்கில் மக்கள் தமது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கவோ முஸ்லிம்கள் தமது மத உரிமைகளை பின்பற்றவோ இடமளிக்கப்படவில்லை. இராணுவத்தை பலப்படுத்தி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியமை சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட்டது. அதுவே இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் ஏற்படவும் காரணமாக அமைந்தது.
மேலும் நாட்டில் அனைத்து மக்களும் அமைதியாகவும் உரிமைகளுடனும் வாழக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அனைத்து தரப்பிடமும் காணப்பட்டது. குறிப்பாக தமிழ் மக்களின் ஒரே நிலைப்பாடும் அதுவாகவே காணப்பட்டது. அந்த காரணங்களை அடிப்படையில் வைத்தே தற்போது ஆட்சிமாற்றம் வரையில் வந்துள்ளது. ஆகவே புதிய அரசாங்கம் ஆட்சியை கொண்டுசெல்ல தயாரான போது நாட்டில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் நினைவுபடுத்த நாம் விரும்புகின்றோம்.
இந்த நாட்டில் ஏற்படுத்துவதாக கூறிய அரசியல் தீர்வு எங்கே? அரசியல் ரீதியில் ஏற்படுத்துவதாக கூறப்பட்ட மாற்றங்கள் எங்கே? ஆகவே இப்போதாவது சிறுபான்மை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் நாட்டை ஐக்கியப்படுத்த மேற்கொள்வதாக கூறிய நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போதும் சிறுபான்மை மக்களை ஓரம்கட்டும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது.
மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இழுத்தடிப்புகளை மேற்கொள்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக கூறிய அரசாங்கம் இன்றுவரை அவர்களை தடுத்து வைத்திருப்பது ஏன். கடந்த காலத்தில் முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட கண்துடைப்பு அரசியல் இவர்களும் கையாளக்கூடாது. ஆகவே உடனியாக தமிழ் கைதிகளின் விடுதலையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM