ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு பிள்ளையாரடியில் வாகனம் திருத்தும் இடத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. இச் சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

 வேன் ஒன்றை திருத்திக் கொண்டிருந்த போது திடீரென தீப் பிடித்துள்ளது. இதனையடுத்து பிரதேச மக்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 தீ விபத்தினால்  வேன், மோட்டார் சைக்கிள் இரண்டு வாகன இயந்திரங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் சுமார் 35 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.