கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த மேலும் ஒரு குழுவினர் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர். 

அதன்படி இலங்கை விமானப் படையினரால் பராமரிக்கப்பட்டுவரும் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 175 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் 92 பெண்கள் உள்ளதுடன், அவர்கள் கொழும்பு -12 கொட்டாஞ்சேனை மற்றும் தெமட்டகொடை, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதைத்தொடர்ந்து குறித்த பகுதி மக்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 175பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து பி.சி. ஆர். பரிசோதனை அறிக்கையில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியதைத்தொடர்ந்து இன்று (11.05.2020)  அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வு இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குறூப் கப்டன் றொகான் பத்திரன தலைமையில் நடைபெற்றது.

இதன் போது விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமுக்கு வருகை தந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

அத்தாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர் தாதிமார் அனைவரும் தங்களின் சகோதரி போன்றும் நான் கொரோனா வைரஸின் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர் என்று  என்னை பாராது கவனித்தார்கள், வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.

இதேபோன்று சிறுமி ஒருவர் மனதை நெகிழ வைக்கும் காட்சி ஒன்றும் தனிமைப்படுத்தல் முகாமில் இடம்பெற்றது, இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தின் விமானப்படை வைத்தியர் ஒருவருக்கு பூச்செண்டு வழங்கி நன்றி தெரிவித்துள்ள சிறுமியை கண்ட அனைவரையும் வியப்புக்கு ஆழ்த்தியுள்ளது.

இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இரண்டாவது கட்டமாக  175பேரில் 72ஆண்களும் 78பெண்களும் 25சிறுவர்களும் தனிமை படத்திலே நிறைவுசெய்து தங்களின் வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.