கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை  தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்றைய தினம் முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,700 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் ஆபத்து அதிகளவில் அல்லாத 21 மாவட்டங்களில் சுமார் 3,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் 2,700  பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

அதேநேரம் மறுஅறிவித்தல் வரும் வரையில் நீண்ட தூர மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.