வரையறைகளுடன் நாடு விடுவிக்கப்படுகிறது - அனில் ஜாசிங்க

Published By: Digital Desk 3

10 May, 2020 | 08:55 PM
image

(எம்.மனோசித்ரா)

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் நாளையிலிருந்து வரையறைகளுடன் நாடு விடுவிக்கப்படவுள்ளது என்பதனை நாட்டில் கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கருதிவிடக் கூடாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

எனவே வைரஸ் பரவல் காரணமாக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இந்த சந்தர்ப்பத்தில் அன்றாட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் அரச மற்றும் தனியார் திணைக்களங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாளை முதல் சில வரையறைகளுடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. முழுமையான கொரோனா வைரஸ் பரவலுக்குள் நாம் வாழ்ந்த முறைபற்றி அனைவரும் அறிவோம். இதன் போது நாம் இது வரையில் பயன்படுத்தியிராத வசனங்கள் பலவற்றையும் பயன்படுத்தினோம்.

இவ்வாறான நிலையிலும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தல் அத்தியாவசியமானதாகும். இலங்கையில் கொரோனா வைரஸ் முற்றாக ஒழிப்பட்டுள்ளது என்பது இதன் அர்த்தமல்ல. இதற்கு நீண்ட காலம் எடுக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

அவ்வாறெனில் அண்மைக்காலமாக அதாவது கடந்த 2 தொடக்கம் 3 மாதங்களுக்கு இடையில் எம்மால் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக எம்மால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல்கள் சட்டத்திற்குட்பட்ட விதிமுறைகள் என்பன தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

அதன்படி செயற்படும் போது அரச திணைக்களங்கள் தனியார் திணைக்களங்கள் பாரிய விற்பனை நிலையங்கள் சிறு விற்பனை நிலையங்கள் அதே போன்று பொதுப் போக்குவரத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அதே போன்று குறிப்பிட்டளவு நோயாளர்கள் இனங்காணப்படலாம். அவ்வாறு இனங்காணப்படும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றிய நடவடிக்கைகள் சுகாதார அமைச்சினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

எனவே தற்போது வரையும் தடிமன், காய்ச்சல் , உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் எம்மால் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் அனுமதியாகுமாறும் அல்லது 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியத்தருமாறு கோருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை...

2024-03-01 02:28:09
news-image

வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களின்...

2024-03-01 02:04:26
news-image

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின்...

2024-03-01 01:15:03
news-image

சபாநாயகரின் தீர்மானம் பிழை என்றால் நீதிமன்றம்...

2024-02-29 23:54:44
news-image

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை...

2024-02-29 21:51:35
news-image

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் சட்டவாட்சிக்கு...

2024-02-29 23:03:12
news-image

மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் ...

2024-02-29 21:52:22
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட...

2024-02-29 21:54:10
news-image

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர...

2024-02-29 21:55:44
news-image

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024-02-29 21:52:44
news-image

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்துக்கு தயங்க...

2024-02-29 21:49:28
news-image

மலைப் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டம் விரிவுபடுத்தப்படும்...

2024-02-29 21:48:58