அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழுவின் மூன்று முன்னணி உறுப்பினர்கள் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்புகளை பேணியமைக்காகவே அவர்கள் இவ்வாறு தம்மை தாமே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் பணிப்பாளரும், பணிக்குழுவின் முன்னணி உறுப்பினருமான 79 வயதான டாக்டர் அந்தோனி ஃபாசியும் (Dr Anthony Fauci), நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பணிப்பாளரான 68 வயதுடைய டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் (Dr Robert Redfield) மற்றும் உணவு, மருந்து நிர்வாக அலுவலகத்தின் ஆணையளரான 60 வயதான ஸ்டீஃபன் ஹான் (Stephen Hahn) ஆகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான கட்டிடங்களில் ஒன்று கூட கொரோனா வைரஸிலிருந்து விடுபடவில்லை என்பதற்கான மற்றொரு தெளிவான உதராணம் இதுவாகும்.

Photo Credit : Los angeles time