அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது நாட்டு மக்களின் கடமை : சாந்த அபேசேகர

Published By: J.G.Stephan

10 May, 2020 | 03:56 PM
image

(செ.தேன்மொழி)

உலகச்சந்தையில் எண்ணை விலை குறைந்துள்ளமையினால் அந்த சலுகையையாவது மக்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்த புத்தளம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர,  ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதிக்கும்  வகையில் செயற்பட கூடாது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா தொற்றினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சந்தையில் எண்ணை விலை குறைந்திருக்கும் நிலையில் அதனால் வழங்கக்கூடிய சலுகையையாவது அரசாங்கம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். புத்தளம் மாவட்டத்தில் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் குறைந்தது மண்னெண்ணையையாவது சலுகையாக இவர்களுக்கு பெற்றுக்கொடுத்து உதவ வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்பட்டு வருகின்றது. இதனாலேயே எதிர்க்கட்சி தலைவர்கள் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு தெரிவிக்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டில் 52 நாள் அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு அரசியலமைப்பை மீறினார்கள். தற்போதும் அதனையே செய்கின்றார்கள்.  

நல்லாட்சி அரசாங்கத்துக்கு 5 வருட ஆட்சியை நடத்த மக்கள் அனுமதித்திருந்த போதிலும் இவர்கள் பெரும் இடையூறுகளை செய்து வந்தனர். அதனால்,  அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது அரசியல் வாதிகள் மாத்திரமல்ல நாட்டு மக்களின் கடமையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39