யாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 ஆவது படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 60 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.கொழும்பு பண்டாரநாயக்க  மாவத்தையைச் சேர்ந்த 60 பேரே  இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

19 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட  நிலையில் , அவர்களுக்கு கொரோனா தொற்றில்லை என பீ.சீ.ஆர்(PCR) பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலையில் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் 52 ஆவது படைப்பிரிவு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சேனா வடுகே கலந்துகொண்டிருந்தார்.