அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் உள்ள கிணறொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

குறித்த அனர்த்தமானது நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 3 மற்றும் 6 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.

இரண்டு சிறுவர்களின் சடலங்களும் நேற்று மாலை மீட்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அப் பகுதியை சுற்றிவைளத்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.