தனிமைப்படுத்தல் கலத்தை நிறைவு செய்த 318 பேர் இன்றைய தினம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முப்படையினரால் 37 தனிமைப்படுத்தல் நிலையங்கள் தற்போது நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 27 நிலையங்கள் இராணுவத்தினராலும், 5 நிலையங்கள் விமானப் படை மற்றும் கடற்படையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

6,316 நபர்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை நிறைவுசெய்துள்ளனர்.

மேலும் 4,429 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவாற்காக நேற்றை தினம் மாத்திரம் நாட்டில் சுமார் 1,424 பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் நேற்று வரை 35,323 பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.