மட்டக்களப்பில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தி, கஞ்சாசெடி வளர்த்த இருவர் கைது 

Published By: Digital Desk 3

09 May, 2020 | 09:59 PM
image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள  தனியார் கையடக்க தொலை தொடர்பு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரம் அமைந்துள்ள தங்கு விடுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் கஞ்சா செடிவளர்த்து வந்த அந்நிறுவனத்தில் கடமையாற்றி வந்த இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் கையடக்க தொலைபேசி கோபுரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள விடுதியை சம்பவதினமான இன்று பகல் விசேட புலனாய்வு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் போது இங்கு அங்கு தங்கிருந்து கடமையாற்றி வந்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கருவப்பங்கேணி நாவற்கேணியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஒருவரையும், கஞ்சா செடி வளர்த்து வந்த மாத்தறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் உட்பட இருவரையும் கைது செய்துள்ளதுடன் கசிப்பு ஒரு போத்தல் மற்றும் கோடா கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் , சுமார் 4 அடி கொண்ட கஞ்சா செடியை மீட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59