நாடுமுழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையின் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு அந்த இடங்களை சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் படையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தில்  கொலன்னாவை, கடுவலை, கம்பஹா, தெஹிவளை மற்றும் மவுன்ட் லாவினியா போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடுமுழுவதும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், 27,731 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.