பாகிஸ்தான் மூன்று உலகக் கிண்ணங்களை இழப்பதற்கு வசிம் அக்ரம்தான் காரணம் என அமிர் சொஹைல் குற்றம்சாடியமைக்கு வசிம் அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த வசிம் அக்ரம், 1992 ஆம்  ஆண்டுக்குப் பின் உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான்  வெல்லாமல்  இருப்பதை  உருவாக்கினார்.

அக்ரம் பாகிஸ்தானுக்காக நேர்மையாக இருந்திருந்தால், 1996, 1999 மற்றும் 2003 களில் உலகக் கிண்ணங்களை வென்றிருக்கலாம்.  இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இதற்கு பின்னால் உள்ள குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்துக்கு முன் கொண்டு வரவேண்டும் என அமிர் சொஹைல் குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில், சிலர் அவர்களை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக எனது பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று வசிம் அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வசிம் அக்ரம் கூறுகையில்,

‘‘என்னைப்பற்றி இப்படி எதிர்மறையான விடயங்களை கேட்கும்போதெல்லாம் மிகவும் கவலையாக உள்ளது. ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆன பின்பும், சில வீரர்கள் அவர்களை பிரபலப்படுத்துவதற்காக என்னுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள்.

அவர்களை பற்றி என்னாலும் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்க முடியும். அது என்ன நோக்கத்துக்கு உதவும். அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன். ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆனப்பிறகு கூட நான், பெற்ற மரியாதை மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அன்பு ஆகியவற்றை பற்றி சிந்திக்கிறேன்’’ என்றார்.