யாழ்ப்பாணத்தின் வழமை நிலை குறித்து யாழ். அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ள கருத்து

Published By: J.G.Stephan

09 May, 2020 | 08:56 PM
image

அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு அமைய யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும், ஆயினும்  தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிப்பதற்கு அனுமதி இல்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்டசெயலகத்தில் இன்று  இடம் பெற்றபின்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே,  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து [11.05.2020]  யாழ் மாவட்டம் அரசாங்க ,சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது. அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும்.

 எனினும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுப் போக்குவரத்து, வர்த்தகநிறுவனங்கள் ,சிகை அலங்கரிப்பாளர்கள் , உணவக உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினரின் சுகாதார நடைமுறையை பின்பற்றி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்  யாழ் மாவட்டம் வழமைக்குத் திரும்புகின்றபோதிலும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கி விட வில்லை.

எனவே மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட்டு அநாவசியமாக வீடுகளிலிருந்து வெளியே வராது தேவையான விடயங்களுக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்து தமது தேவைகள் முடிந்த பின்னர் வீடுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.  இயன்றளவு முக்கியமாக தொழில்களுக்கு சென்றுவரும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள் பொதுபோக்குவரத்தினை  சுகாதார  நடைமுறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம். அல்லது தமது தனிவாகனங்களை பயன்படுத்துவதும் சிறந்தது . தனியார் போக்குவரத்து  சபையினருக்கு  பல சுகாதார  நடைமுறைகளை குறிப்பிடட போதும் அவர்களால் குறைந்த அளவு மக்களை  போக்குவரத்தில் உள்ளடக்குவதில் நட்டம் உள்ளது என்றும்  சுட்டிக் காட்டினார்.

பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள்  ஆரம்பமாவதத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கப் படவில்லை. யாராவது தனியார் கல்வி நிலையம் ஆரம்பிப்பார்களாயின்  சட்ட நடைமுறைக்குட் படுத்தப் படுவார். சிறு கைத்தொழில் வியாபாரம் , மீன்பிடி மற்றும் வணிகம் என்பனவும் அனுமதி அளிக்கப் படுவதுடன் அவசர பயணிகள் தவிர்ந்த எவரும் மாவட்டம் விட்டு மாகாணம் செல்ல அனுமதி இல்லை என்றார்.

இக்கலந்துரையாடலில்  யாழ்.பிராந்திய பிரதிப் பணிப்பாளர்  [பொதுச் சுகாதார சேவை ] எஸ் .குமாரவேல்  உட்பட அனைத்து மாவட்ட பிரதேச செயலாளர்கள், முப்படையினர்,  அதிகாரிகள்  ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50