இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த கால்பந்தாட்ட வீரர்

Published By: J.G.Stephan

09 May, 2020 | 04:51 PM
image

டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்கொரிய வீரர் சன் ஹியுங்-மின் கப்பற்படையில் இராணுவ பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

தென் கொரியாவைச் சேர்ந்த கால்பந்து வீரரான சன் ஹியுங்-மின், இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஒரேயொரு ஆசிய வலய கால்பந்தாட்ட  வீரராக  விளங்குகிறார்.தனது திறமையான ஆட்டத்தால் அணியின் முன்னணி வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தென் கொரிய கப்பற்படை முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த சன் ஹியுங் மின், இராணுவ அடிப்படையிலான பயிற்சிகள், பாதுகாப்பு குறித்த படிப்பு, துப்பாக்கிகளை சரியாக கையாள்வது, கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்துவது போன்ற பயிற்சிகளை சிறப்பாக முடித்து பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

சன் ஹியுங்-மின் எம்-16 தாக்குதல் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் படத்தை கப்பற்படை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு சன் ஹியுங்-மின்னுக்கு சல்யூட் அடித்த படத்தை வெளியிட்டு அவரை கெளரவப்படுத்தியிருந்தது.

தென்கொரிய ஆண்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டமாகும். தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் அரசியல் ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதால், இரு நாட்டிலும் தமது இராணுவ ஆள்பலத்தை அதிகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.  இந்நிலையில், வடகொரியாயில்13 இலட்சம் இராணுவ வீரர்களும், தென் கொரியாவில் 6 இலட்சம் இராணுவ வீரர்களும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05