(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிப்பொருட்களின் மூன்றாம்கட்ட பொருட்கள் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தன.

சீனாவின் ஷங்காய் நகரிலிருந்து கிழக்கு சீன எயார்லைன்ஸ் விமானசேவை ஊடாக இப்பொருட்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.அவற்றில் 30 000 கொரோனா வைரஸ் பரிசோதனை உபகரணங்கள், ஒருமுறை பயன்படுத்திய பின்னர் அகற்றக்கூடிய 12,330 தற்பாதுகாப்பு அங்கிகள் என்பன அடங்குகின்றன.

இம்மூன்றாம் கட்ட உதவியின் அடுத்த தொகுதி பொருட்களான  17, 670 தற்பாதுகாப்பு அங்கிகள், 30 000 கே.என் - 95 முகக்கவசங்கள், 30 000 தற்பாதுகாப்புக் கண்ணாடிகள் மற்றும் 600, 000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் என்பன வெகுவிரைவில் விமானம் மூலம் வந்துசேரும் என சீனத்தூதரகம் அறிவித்திருக்கிறது.