சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது வெளிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதை நான்கு கால் ரோபோ ஒன்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

தேசிய பூங்காக்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் மனித தொடர்பை குறைக்கும் பொருட்டு ரோபோ ஒன்றை பாஸ்டன் டைனமிக் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

ஸ்பாட் (SPOT) என்று பெயரிடப்பட்ட இந்த  மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்திலான ரோபோ, சோதனை முயற்சியாக பிஷன்-ஆங் மோ கியோ பூங்காவில் இயக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ஸ்பொட் எனப்படும் ரோபோ, பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு குரல் வடிவில் ஆங்கிலத்தில் அறிவுறுத்துகிறது.

5.7 மில்லியன் சனத்தொகை கொண்ட சிங்கபூரில் கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக இதுவரை 22,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது கொரோனாவால் பாதிப்புக்குள்ளான ஆசியாவின் மிக உயர்ந்த எண்ணிக்கையில் ஒன்றாகும். அங்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.