7 வாரத்திற்கு பின் மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள கொழும்பு பங்குச் சந்தை !

Published By: Vishnu

09 May, 2020 | 11:37 AM
image

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கையானது எதிர்வரும் 11 ஆம் திகதி மீள தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் மார்ச் 20 ஆம் திகதி ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து கொழும்பு பங்குச் சந்தையின் 7 வார கால செயலற்ற தன்மை முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, 

கொழும்பு பங்குச் சந்தைதயின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்க, பங்குதாரர்களிடம் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க தங்கள் வணிக நடவடிக்கைகள் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் கொவிட் -19 பரவுவதைத் தொடர்ந்து 2020 மார்ச் 16 ஆம் திகதி முதல் கொழும்பு பங்குச் சந்தையானது மூடப்பட்டது. அதன் பின்னர் மார்ச் 20 அன்று வரையறுக்கப்பட்ட வர்த்தக காலத்திற்கு மாத்திரம் திறக்கப்பட்டது. 

அன்றைய தினம் மாலை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து எந்த வர்த்தகமும் இடம்பெறவில்லை. 

இதனால் கொழும்பு பங்குச் சந்தையானது கொவிட் -19 காரணமாக பிராந்தியத்தில் மிக நீண்ட காலமாக மூடப்பட்ட பங்குச் சந்தையாக மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14
news-image

பேராதனை, கொழும்பு ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன்...

2026-07-13 09:18:27
news-image

டெங்கு அபாயத்தால் மூடப்பட்டிருந்த கட்புல, அரங்கேற்றக்...

2026-07-13 09:16:08
news-image

மஹரகமவில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

2026-07-13 09:06:29
news-image

தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் விடங்களில்...

2026-07-13 08:53:19
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்,...

2026-07-13 09:14:36