உலகளவில், கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்ச ம்பெற்று வருகின்ற இந்நிலையில், ஆய்வாளர்களால் மற்றுமொரு விடயம் ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய சீன மாகாணமான ஹெனானில் உள்ள ஷாங்கியு மாநாகர சபை வைத்தியசாலையிலேயே குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், கொவிட் - 19 தொற்று பாதிக்கப்பட்ட சில ஆண்கள் குணமடைந்த பின்னரும் அவர்களின் விந்தணுக்களில் வைரஸ் தொடர்ந்து இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்புகள் அமெரிக்க மருத்துவ இதழான ஜமா நெட்வொர்க் ஓபனில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. 

இந்நிலையில், கொவிட் வைரஸ் காரணமாக உலகில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 275,000 தாண்டியுள்ளதுடன் 40 இலட்சம் மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.