(செ.தேன்மொழி)

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கு அரச ஊழியர்களின் ஊதியத்தை குறிவைக்கமல் , சிறந்த முறையில் அதனை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , கடந்த அட்சிகாலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்தியவங்கி பிணைமுறி மோசடிகள் உள்ளிட்ட நிதி மோசடிகளில் கொள்ளையிடப்பட்ட நிதியைத்திரட்டி  பொருளாதார நெருக்கடியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகளுக்கான ஆதாரங்கள் இணைத்தளம் , காணொளிகள் மற்றும் குறல் பதிவுகளில் பதிவாகியுள்ளதாகவும், அவற்றை ஆதாரமாக கொண்டு கொள்ளையிடப்பட்ட நிதியை அரசாங்கத்திற்கு இலகுவாக திரட்டிக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பொது அனர்த்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்சி, நிறம் பேதமின்றி உதவிகளை செய்வதே அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு எதிர்க்கட்சி உறுப்பினர்களை மாத்திரமின்றி மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. அரசாங்கம் உண்மையை மறைத்து பொய் உரைத்து வருவதால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. 

கொரோனா தொற்றினால் நாட்டுக்கு பாதிப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதறடகாக கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீனப் பெண்ணைக்கட்டித் தழுவி பெரும் காணொளியை வெளியிட்டு பெரும் ஆர்பாட்டமொன்றையே சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நிகழ்த்திக்காட்டியிருந்தார். 

நாட்டின் ஜனாதிபதி 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்காக நாட்டை மூடமுடியாது என்று அலட்சியமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். இதேவேளை வைத்திய நிபுணர்கள் யுத்தத்தையும் வைரஸ் பரவலையும் ஒருமித்து பார்த்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறித்திய போதும் அரசாங்கம் அதனை துளியளவேனும் கருத்திற் கொள்ளவில்லை.

தற்போது வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை குறிவைத்துள்ளனர். அரசாங்கத்தின் கைப்பாவையான பி.பீ.ஜயசுந்தர இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். அரச ஊழியர்களின் சம்பளத்தை பெற்றுக் கொள்ளாமல் அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்துக் கொள்வதற்க சிறந்த வழிமுறைகள் இருக்கின்றன. இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் 889 பில்லியன் நிதி மத்திய வங்கி பிணைமுறியிலிருந்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நிதியை பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய எடுத்துக் கொள்ளலாம்.

மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசாங்கத்தில் மத்தியவங்கி பிணைமுறியிலுந்து  11 பில்லியன் நிதி கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், அதற்காக 26 நிறுவனங்களில் 12 பில்லியன் நிதி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனையும் அதற்காக எடுத்துக் கொள்ளலாம். இதேவேளை தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனே சங்கரில்லா ஹோட்டலுக்கருகில் உள்ள காணியை முழு உடமையுடன் விற்றதுடன், இதன் போது லஞ்சப்பணமாக மாத்திரம் 5 இலட்சம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்தி தெரிவித்திருந்தார். இதேவேளை தாமரை கோபுர திறப்பு விழாவின் போது அதன் கட்டுமான பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் பணத்தை தற்போது நிதிமுகாமைத்துவத்தில் ஈடுப்பட்டு வரும் பரிசில் ராஜபக்ஷ கொள்ளையிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.இந்த நிதிகளை கொண்டு சிறப்பான முறையில் பொருளாதார நெருக்கடியை நிவர்த்திச் செய்துக் கொள்ள முடியும்.

தற்போது நிதி முகாமைத்துவத்தில் ஈடுப்பட்டு வரும் அமெரிக்க பிரஜையான பரிசில் ராஜபக்ஷவுக்க சொந்தமான மல்வானை பகுதியிலுள்ள வீட்டை விற்று அதில் கிடைக்கப் பெறும் நிதியைக் கொண்டு பொருளாதார நெருக்கடிவை முகாமைத்துவம் செய்யலாம். இதற்காக அரச ஊழியர்கள் அவர்களது ஊதியத்தை தியாகம் செய்யத் தேவையில்லை. உலகச் சந்தையில் எண்ணை விலை குறைந்துள்ள போதிலும்  அந்த சலுகையை மக்களுக்கு வழங்கவில்லை. நெருக்கடியான நிலையிலும் அரசி விலை குறைக்கப்படவில்லை.இவற்றின் ஊடாக கிடைக்கப் பெறும் வருமாணத்தைக் கொண்டு அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை தாராளமாக நிவர்த்தி செய்துக் கொள்ளமுடியும். அரச தரப்பு அரசியல் வாதிகள் மக்களுக்க நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முன்வராத நிலையிலே, எதிர்தரப்பா இருந்தாலும் மக்களின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி எமது சொந்தக் காசையும், நண்பர்களின் உதவியையும் , ஏனைய நலன்விரும்பிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள சாதாரணமக்களுக்கு சலுகைகளை வழங்கி வந்தோம். அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த அரச தரப்பினர் பல்வேறு இடையூறுகளை செய்தனர். அதனையும் சமாளித்து நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தால் எம்மீது போலி வதந்திகளை பரப்புவதுடன், கைதும் செய்து வருகின்றனர்.

கொரேனா தொற்று காரணமாக உள்நாட்டில் மாத்திரம்891 மில்லியன் நிவாரணம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அமெரிக்காவிலிருந்து 5.5மில்லியன் அமெரிக்கா டொலரை பெற்றுக் கொடுக்க தீர்மானித்திருப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.அப்படியென்றால் இந்த நிதிக்கு தற்போது என்னவாயிற்று, இவற்றை மறைப்பதற்காகவே பாராளுமன்றத்தை கூட்டாது , அலரிமாளிகையில் விளையாட்டு பாராளுமனறமொன்றை கூட்டி வருகின்றனர். இந்த சந்திப்பை ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசியக் கட்சி , மக்கள் விடுதலை முன்னி என அனைவரும் நிராகரித்திருந்தனர். இந்நிலையில் இந்த நாட்டுக்கு எவ்வகையிலும் உரிமைக் கோர முடியாத பரிசில் ராஜகப்ஷவுக்கு நிதி முகாமைத்துவத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.