கொரோனாவினால் மரணிக்காத முஸ்லிம் பெண்ணின்  உடல் முறைதவறி தகனம் - மனோ கவலை

By Vishnu

08 May, 2020 | 05:15 PM
image

(நா.தனுஜா)

கொரோனாவினால் மரணிக்காத முஸ்லிம் பெண்ணின்  உடல் முறைதவறி தகனம் செய்யப்பட்டமைக்குக் கவலை வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மனோகணேசன், நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இனரீதியான பாரபட்சத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்.

இது குறித்து மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

'கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்காதஇ கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல் முறைதவறித் தகனம் செய்யப்பட்டமைக்காக ஒரு இலங்கையன் என்ற வகையில் வேதனையடைகிறேன்.

முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த இனரீதியான பாரபட்சத்தைக் கண்டித்துஇ இந்த நடவடிக்கைக்கு எதிராக எனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றேன்'.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right