(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அரசாங்கம் 240,000 ஆயிரம் கொடுப்பனவு வழங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எவ்வித  உண்மைத் தன்மையும் கிடையாது.

கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி தொடர்ந்து பொதுத்தேர்தலை பிற்போடவே எதிர் தரப்பினர் முயற்சிக்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் மே மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை மாத்திரம் விடுத்துள்ளார். எவ்வித கட்டாயப்படுத்தலையும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுக்காது.


பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி தொடர்ந்து பொதுத்தேர்தலை பிற்போடவே எதிர்தரப்பினர் முயற்சிக்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் உதவி புரிகின்றார்கள்.

முன்னாள் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அரசாங்கம் 240,000ஆயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.

அரச ஊழியர்கள் மே மாத சம்பளத்தில் ஒரு பகுதியை நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை மாத்திரம் விடுத்துள்ளார். எவ்வித கட்டாயப்படுத்தலையும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுக்காது.

 ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததில் இருந்து அரச நிர்வாகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கியமை அனைத்தையும் எதிர்தரப்பினர் இன்று சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

2015ம் ஆண்டுக்கு  முற்பட்ட அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தற்போது பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு மீள ஆரம்பித்துள்ளார்கள். போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சி மாற்றத்தை எதிர்தரப்பினரால்  ஏற்படுத்த முடியாது என்றார்.