சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் ஷர்மாதான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என நியூஸிலாந்து முன்னாள் வீரர் சைமன் டூல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவருக்குப் பின்னர் 2013 ஆம் ஆண்டிலிருந்து ரோஹித் ஷர்மா தற்போது வரை சர்வதேச ஒருநாள் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி வருகிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதலாவது இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளதுடன், ரோஹித் ஷர்மா மூன்று முறை இரட்டை சதங்களை விளாசியுள்ளார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் ஷர்மாதான் இந்தியாவின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சைமன் டூல் கூறுகையில் ,
‘‘ரோஹித் ஷர்மாவின் ‘ஓட்ட குவிப்பு வேகம்’ கடந்த காலத்தைவிட சிறப்பாக உள்ளது. அவர் 70, 80 ஓட்டங்களை கடந்து 90 ஓட்டங்களை தொடும்போது கூட பதற்றம் அடைவதில்லை. அவர் தனித்துவமான வீரர்.
இந்தியாவை பொறுத்த வரைக்கும் தனிப்பட்ட முறையில் அவரைத்தான் நான் முதலில் தெரிவு செய்வேன். எல்லா காலக்கட்டத்திலும் இந்திய அணியின் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மாதான்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் சராசரி 49. ஓட்ட குவிப்பு வேகம் 88. சச்சின் டெண்டுல்கரின் சராசரி 44. ஓட்ட குவிப்பு வேகம் 88. ஆகவே, ‘நம்பர்’ அடிப்படையில் பார்த்தால் சச்சினை விட ரோஹித் ஷர்மா சிறந்தவர். இதனால் அவரை சிறந்தவராக தெரிவு செய்துள்ளேன்’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM