மஹரமகவில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ளுமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து வசதிகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து நோயாளிகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாமையினால் நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகளை  எளிதாக்குமாறும் போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் நோயாளிகளுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் ஒரு திட்டத்தை வகுக்காவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.