கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக நேற்று மாத்திரம் நாட்டில் மொத்தமாக 1,553 பி.சி.ஆர்  சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

2020 பிப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை இலங்கையில் மொத்தமாக 32,078 பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27 ஆம் திகதியே அதிகளவான பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மொத்தமாக 1,869 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 824 ஆக காணப்படுவதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 232 ஆக பதிவாகியுள்ளது.