நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக அவர் பயணித்த மோட்டார் சைக்கிளானாது வீதியிலிருந்து வழுக்கி, அருகிலிருந்து குடியிருப்பொன்றின் சுவரில் மோதியமையினாலேயே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவர்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.