ஈரானில் நிலநடுக்கம் ; ஒருவர் பலி, 7 பேர் காயம்

Published By: P. Saranya

08 May, 2020 | 12:35 PM
image

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, 7 பேர் காயமடைந்துள்ளார்கள்.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் வடக்குப் பகுதியில் உள்ள தமாவாண்ட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் ஆழத்தில ்பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்திற்கு தற்போதுவரை ஒருவர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை .

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பெப்ரவரி மாதம் பரவத் தொடங்கி கொரோனா கடந்த மார்ச் மாதம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது அங்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் சுமார் ஒரு  இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 6,486 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான்...

2026-09-09 17:29:09
news-image

மலேசியாவில் ஹெலிகொப்டர் விபத்து: வைத்தியர் உட்பட...

2026-09-09 14:34:06
news-image

“சிங்க நெபுலா”வின் புதிய தோற்றத்தை வெளியிட்டது...

2026-09-09 12:21:47
news-image

பிரித்தானியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் கோளாறு:...

2026-09-09 12:22:31
news-image

பெண்ணின் வயிற்றிலிருந்து 13 பேனாக்கள், மெழுகுவர்த்தி...

2026-09-09 11:59:59
news-image

ரஷ்ய மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு ;...

2026-09-09 11:14:26
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா...

2026-09-09 11:16:36
news-image

வழமைக்கு திரும்பியுள்ளது ஈபிள் கோபுரம்

2026-09-09 10:55:22
news-image

நேபாளம் அருகே 5.3 ரிச்டர் அளவு...

2026-09-09 14:21:18
news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50