வடமாகாண தனியார் பஸ்கள் இன்று (26) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.

தனியார் பஸ்களுக்கான நேர அட்டவணையில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிலாபம் - கொழும்பு பஸ்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பானது சிலாபம் பஸ் உரிமையாளர் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மூவரை கைதுசெய்தமைக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.