ஜேர்மனி ஊரடங்கை முற்றாக தளர்த்த தீர்மானம் ! 

Published By: J.G.Stephan

08 May, 2020 | 09:04 AM
image

ஜேர்மனி எதிர்வரும் ஒரு சில தினங்களில் ஊரடங்கினை முற்றிலும் நீக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஜேர்மனியின் பிரதமர் அஞ்ஜலா மேர்க்கெல் மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துதல், தொழில் நடவடிக்கைகளை மீட்டெடுத்தல் போன்றவை குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது, ஜேர்மனியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பாடசாலைகள், ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறக்க திட்டமிட்டுள்ளோம் என மேர்கெல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் கொரோனா தொற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் கடந்த வாரம் தேவாலயங்கள், விளையாட்டு மைதானங்கள், நுதனசாலைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கினை முற்றாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜேர்மனியில் கொரோனாவால் 169,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7392 பேர் உயிரிழந்துள்ளனர். 141 700 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அத்துடன் ஜேர்மனியில் நேற்று மாத்திரம் 1268 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், 117 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52