வெள்ளைமாளிகை ஊழியருக்கு கொரோனா !: டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை ? - குழப்பத்தில் வெள்ளை மாளிகை

Published By: J.G.Stephan

08 May, 2020 | 08:04 AM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடும்ப (வேலட்) அந்தரங்க உதவியாளரும் வெள்ளை மாளிகை ஊழியருமான கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென அச்சம் எழுந்துள்ளதையடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேலட் என்றவர் அமெரிக்கா இராணுவப்பிரிவில் பணியாற்றி வருபவர் மட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்காக உருவாக்கப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமானவர்கள் என்பதுடன் டிரம்ப் உள்நாட்டு பயணம் செய்தாலும் வெளிநாட்டு பயணம் செய்தாலும் ஜனாதிபதியுடன் செல்வார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என மருத்துவர்களின் முடிவுகள் வெளியாயின.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், அதிபர் டிரம்ப் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவரும் வேலட் எனப்படும் அந்தரங்க உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது வெள்ளை மாளிகை மட்டுமின்றி டிரம்ப்பையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் டிரம்ப்பின் வேலட்டிற்கு தொற்று உறுதியானதால், இப்போது டிரம்ப்பையும் பரிசோதனை செய்ய வேண்டும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52