15 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதினை அடுத்து அவரின் தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார் இதன்போது அச்சிறுமி குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ள சம்பவமொன்று நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி சில காலங்களுக்கு முன்னர் கண்டிப் பகுதியில் மிளகுத் தூள் பொதிசெய்யுமிடத்தில் வேலை செய்த சந்தர்ப்பத்தில் இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு கொண்டிருந்துள்ளார். ஆனால் குறித்த இளைஞனின் தொலைபேசி எண்ணைத் தவிர வேறு எந்த விபரங்களையும் அறிந்திருக்கவில்லையென பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரால் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.