வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது காணியில் அச்சுறுத்தும் வகையில் யானை ஒன்று நிற்பதை அவதானித்ததுடன், கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.
யானை வெடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையை அப்பகுதியில் இருந்து விரட்டி காட்டுப்பகுதிக்குள் அனுப்பினர்.
குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் விவசாய உற்பத்திகள் அழிவடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM