மீளவும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் இது தொடர்­பி­லான கோரிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அண்­மையில் நடை­பெற்ற சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்­டத்தின் போது இந்த கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய குழுக் கூட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரேரா இது குறித்த யோச­னையை முன்­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு நடை­பெறும் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் போட்­டி­யி­டு­மாறு டிலான் பெரேரா, ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யுள்ளார்.

எவ்­வா­றெ­னினும் மீளவும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தில்லை என்றும் இது தொடர்பான தனது வாக்குறுதியை தான் மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார்.