பாகிஸ்தான் அணி 1996, 1999, 2003 களில் உலகக் கிண்ணகளை வெல்லக் கூடாது என்ற நிலையை உருவாக்கியவர் வசிம் அக்ரம் தான் என அமிர் சொஹைல்  குற்றம் சாட்டியுள்ளார்.

1992 இல் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை வென்றபோது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக  திகழ்ந்தவர் வசிம் அக்ரம்.

இவர் பாகிஸ்தான் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 1992 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை பெற காரணமாக இருந்தார்.

இந்நிலையில் 1992 க்குப் பிறகு பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடாது என்பதை உருவாக்கியவர் வசிம் அக்ரம் என அமிர் சொஹைல் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயம் குறித்து அமிர் சொஹைல் கூறுகையில்,

‘‘இது மிகவும் எளிது. 2003 வரை என்ன நடந்தது என்று நீங்கள் உற்று நோக்கினால், ஒவ்வொரு உலகக் கிண்ணத்துக்கும் முன்பு, அணித்தலைவர்கள் நீக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெரிந்து கொள்ளலாம். இதில் வசிம் அக்ரமின் பங்கு முக்கியமாகும்.

பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்த வசிம் அக்ரம், 1992 ஆம் ஆண்டுக்குப் பின் உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்லாமல் இருப்பதை உருவாக்கினார்.

அக்ரம் பாகிஸ்தானுக்காக நேர்மையாக இருந்திருந்தால், 1996, 1999 மற்றும் 2003 களில் உலகக் கிண்ணங்களை வென்றிருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இதற்கு பின்னால் உள்ள குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்துக்கு முன் கொண்டு வரவேண்டும்’’ என்றார்.