ரெய்னா ஓரங்கட்டபட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் முன்னாள் தெரிவுக்குழுத் தலைவர்!

07 May, 2020 | 10:59 AM
image

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டமை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தெரிவுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்தும் வகையில் அதிரடி துடுப்பாட்ட வீரராக வலம் வந்த சுரேஷ் ரெய்னா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் தெரிவாளர்கள் மீது குற்றம் சாட்டியிருந்த ரெய்னா, அணியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை. அத்துடன் சிரேஷ்ட வீரர்கள் விடயத்தில் தெரிவாளர்கள் அதிக பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும். என்னிடம் ஏதாவது குறைபாடு இருந்தால் அதை சுட்டிகாட்டினால் தானே சரி செய்ய முடியும். அது என்னவென்றே தெரியாத போது எப்படி முன்னேற்றம் காண முடியும் என்றும் ரெய்னா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து விளக்கமளித்த முன்னான் தெரிவுக்கு குழுத்தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்,

வி.வி.எஸ்.லக்ஸ்மன் 1999  ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அவர் முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக  விளையாடி தெரிவாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு அணிக்கும் திரும்பினார். 

அணியிலிருந்து நீக்கப்படும் போது, மூத்த வீரர்களிடமிருந்து நாங்களும் அதைத் தான் (உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடுவது) எதிர்பார்க்கிறோம். துரதிஷ்டவசமாக சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளூர் போட்டிகளில் அத்தகைய அபார ஓட்டக் குவிப்பை நாங்கள் பார்க்கவில்லை. அதேவேளை, ஏனைய இளம் வீரர்கள் முதற்தர போட்டிகளிலும் இந்திய ‘ஏ’ அணிக்கான போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார்கள். தெரிவாளர்கள் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. 

ரெய்னாவை எனது அறைக்கு வரவழைத்து தனிப்பட்டமுறையில் உரையாடினேன். அப்போது நீக்கப்பட்டமை ஏன் என்பது குறித்தும், எதிர்காலத்தில் இந்திய அணிக்கு திரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவரிடம் விளக்கினேன். இத்தகைய முயற்சியை அவர் வெகுவாக பாராட்டியிருந்தார். ஆனால் இப்போது நடந்த சம்பவத்துக்கு நேர்மாறாக அவர் பேசுவது உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது.

இவ்வாறு எம்.எஸ்.கே. பிரசாத் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35