கொரோனா பரவல் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி சீனா மீது கடும் சிற்றத்திலிருக்கும் சந்தர்பத்தில், கொரோனா  தாக்குதல் அமெரிக்கா மீது சீனா தொடுத்த போரா என்ற கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் அமெரிக்காதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் மொத்தம் 1,263,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 74,799 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 

மேலும், கொரோனா வைரஸ் பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது குற்றச்சாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அவர் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் குறைய ஆரம்பித்துள்ளது. நாம் தொழில்களை வேகமாக தொடங்கியாக வேண்டும். கொரோனாவிற்கு எதிராக நான் அமைத்த செயலணி எப்போதும் போன்று பணிகளை மேற்கொள்ளும். மருந்து கண்டுபிடிப்பதில் இவர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்றார்.

மேலும், மக்களை குணப்படுத்தி எப்படி மீண்டும் பணிகளை தொடங்குவது என்பதில் இவர்கள் கவனம் செலுத்துவார்கள். இன்னொரு பக்கம் இந்த வைரஸ் குறித்தும் இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். இந்த வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்தும் இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். விரைவில் இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படையாக அறிவிப்போம்.

அமெரிக்காவில் நடந்த இந்த கொரோனா தாக்குதலை இரண்டாம் உலகப்போரின் போதும் ஜப்பான் அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலை விட மோசமானது.

அதில் பலர் பலியானார்கள். அதேபோல் 2011 இல் நடந்த 9/11 தாக்குதலை விட இது மோசமானது. ஈராக் - அமெரிக்கா போரைவிட இது கடினமானது. அமெரிக்கா வரலாற்றில் இது மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

அமெரிக்கா மீது சீனா தொடுத்த போர் என்று இதை பார்க்க வேண்டும். சீனாவை விட அமெரிக்காவிற்கு முதல் எதிரி இந்த வைரஸ்தான். இது இந்த வைரசிற்கு எதிரான போராட்டம். சீனா நினைத்து இருந்தால் இந்த பிரச்சனையை தடுத்து இருக்கலாம். ஆனால் சீனா வேண்டும் என்றே பிரச்சனை வளரட்டும் என்று விட்டுள்ளது. இதற்கு சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த செவ்வியில்  டிரம்ப் கூறியுள்ளார்.