ஹட்டன், கினிகத்தேனை பகுதியில் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியில் வைக்கப்பட்ட முன்னாள் நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே கடந்த 30 ஆம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதன் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றுடன் அவர்களது விளக்கமறியல் காலம் முடிவுக்கு வந்த நிலையிலேயே மீண்டும் அவர்களை ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை, தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.