கிம் ஜொங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்ததாக எந்த அறிகுறியும் இல்லை - தென் கொரிய உளவு நிறுவனம்

Published By: Digital Desk 3

06 May, 2020 | 06:41 PM
image

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று தென் கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் உளவு நிறுவனத் தலைவர், புதன்கிழமை தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்கள்  குழுவிடம், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜொங் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் உல் சங் - உன் பிறந்ததின கொண்டாட்டத்தில்  கிம் ஜொங் உன் பங்கேற்கவில்லை. கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்  கிம் ஜொங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தபின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார்.

இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.

பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த வாரம் கிம் உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்றார்.

புதன்கிழமை, உளவு நிறுவனம் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கிம் இந்த ஆண்டு இதுவரை 17 முறை பொதுவில் தோன்றியிருப்பதாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் மிகக் குறைவானது என்றும் தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இந்த காலகட்டத்தில் கிம் வழக்கமாக சராசரியாக 50 முறை பொதுவில்  தோன்றியுள்ளார்.

அவர் பொது வெளியில் தோன்றுவது குறைந்தமையானது, அநேகமாக கிம் உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தியதன் விளைவாகவும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10