அஷ்வின் மீது நிறைய போட்டி பொறாமை இருப்பதாக பலரும் கூறியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார்.

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான ஹர்பஜன்சிங்கும், சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த முருகன் அஷ்வினும் இன்ஸ்டாகிராம் மூலம் நேரடியாக கலந்துரையாடினர். கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ஹர்பஜன் சிங் கூறுயைில்,

 ‘எங்களிடையே நிறைய போட்டி பொறாமை இருப்பதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் ரவிச்சந்திரன் அஷ்வின் மீது ஒரு போதும் பொறாமை கொண்டதில்லை. இப்போது உலகின் சிறந்த ‘ஓப்-ஸ்பின்னர்’ அஸ்வின்தான். இதேபோல் அவுஸ்திரேலியாவின் நெதன் லயனும் சிறந்த ‘ ஓப்-ஸ்பின்னராக’ திகழ்கிறார்.

அஸ்வின் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இன்னும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. உலக அளவில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் கூட இடம் பிடிக்கலாம்’ என்று குறிப்பிட்டார்.

33 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி365 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.