வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா : காரணம் இதுவா?

Published By: J.G.Stephan

06 May, 2020 | 04:30 PM
image

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார். 

மாவட்ட எல்லையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர். இருப்பினும் கொரோனா அதிகம்  பாதித்துள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து அவர் வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில்  சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ' கிங்டம்...

2025-02-13 15:37:05
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-02-13 15:33:45
news-image

மகளின் ஆசையை நிறைவேற்றும் இளையராஜா

2025-02-13 13:45:38
news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14
news-image

பிரைம் வீடியோவில் வெளியாகும் கதிர் -...

2025-02-12 16:22:53
news-image

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட...

2025-02-12 15:59:29
news-image

யோகி பாபு நடித்திருக்கும் 'லெக் பீஸ்'...

2025-02-12 14:51:36
news-image

'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் இசை...

2025-02-11 22:33:07