தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம், ‘தளபதி 66’ படத்தைத் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை ராம நாராயணனின் தேனாண்டாள் நிறுவனம் தயாரித்தது. இப்படம் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனாலும் தயாரிப்பு தரப்பில் நஷ்டம் என்று செய்திகள் வெளியானது.

இது குறித்து தயாரிப்பாளர் முரளி ராமசாமி பேசுகையில்,“ மெர்சல் படம் வெளியான தருணத்தில் என்னுடைய நிதி சூழல் திருப்திகரமாக இல்லை. ஆனால் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

பத்து நாள் முன்பு கூட விஜயுடன் தொடர்பு கொண்டு பேசினேன். நாங்கள் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ணுவோம் என்று சொல்லியிருக்கிறார். அநேகமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 65’ படத்திற்கு பிறகு இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.” என்றார்.

இதன்மூலம் ‘தளபதி 66’ படத்தை தயாரிப்பது தேனாண்டாள் நிறுவனம் என்பது உறுதியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.