ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் பல்வேறு தரப்புக்களினால் உப குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச அரசசார்ப்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் போன்ற தரப்பினர் உப நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை மனித உரிமை நிலைமை தொடர்பாகவும் ஜெனிவா மனித உரிமை பேரவைக் கட்டடத்தொகுதியில் பல்வேறு உபகுழுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.
இதேவேளை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் ஜெனிவாவில் உப குழுக்கூட்டங்களை இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி நடத்திவருகின்றன. அத்துடன் நாளை 28 ஆம் திகதி நடைபெறவுள்ள உபக்குழு கூட்டமொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் பல்வேறு உப குழுக்கூட்டங்களில் பங்கேற்றுவருகிறார்.
இந்தக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நீதி கிடைக்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றார். அந்த வகையில் எதிர்வரும் ஐந்து நாட்களிலும் தொடர்ச்சியாக இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி பல்வேறு உபகுழுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.