பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள் குழுவினர் உட்பட 226 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் இன்றைய தினம் அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை நாடு முழுவதும் 39 சிறப்பு தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தமாக 4,882 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை மொத்தமாக 5,136 நபர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பூர்த்திசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.