அரசியல் வெறுமையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர்-  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 

05 May, 2020 | 10:19 PM
image

அரசியல் வெறுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனர் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.   

வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்கள் இன்று தமது போராட்ட தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதாகைகளை தாங்கியிருந்ததுடன் ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவ் ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். ஆனால் நாங்கள் இந்த போராட்டத்தினை ஆரம்பித்த காலத்திலும் இவ்வாறான போராட்டம் வடக்கு கிழக்கில் ஆரம்பித்தபோதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்துடன் முண்டு கொடுத்துக்கொண்டிருந்தபோது மகிந்த ஆட்சிக்கு வந்துவிடுவார் என மக்களுக்கு அச்சமூட்டிக்கொண்டிருந்தனர். 

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதனையே கூறியிருந்தனர்.

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் தமது நண்பரான ரணில் விக்கிரமசிங்க காலத்தில் பாடிய பாடலையே கோத்தாபய ராஜபக்ச காலத்திலும் மகிந்த முன்னிலையில் பாடியுள்ளனர்.

அந்த பாடலின் பொருளானது உள்நாட்டு விசாரணையும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கான மூலப்பொருளை பெற்றுக்கொள்வதற்காகவுமே இருக்கின்றது. 

இது தந்தை செல்வாவின் அரசியல் அல்ல. தமிழ் மக்களின் முக்கிய நாளில் மீண்டும் தமிழ் மக்களின் காதுகளில் கடவுள்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற வாசகமே ஒலிக்கின்றது.

அதுமாத்திரமின்றி மகிந்த ராஜபக்ஷவிடம் கூட்டமைப்பினர் ஒரு கோவையை கொடுத்துள்ளனர். அது என்னவென்று தெரியாது. 

கடந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்ற வேண்டிய நிறைவேற்றக்கூடியதாக இருந்த விடயங்களை இந்த ஆட்சிக்காலத்தில் கொடுத்துள்ளமை நகைப்புக்குரியதே.

அவர்களுக்கு அரசியல் வெறுமையொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வெறுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் தமது பதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் தேர்தல் நேர போலி பிரசாத்திற்காகவுமே காணி பிடிப்பு அரசியல் கைதிகள் விடயங்களை மீண்டும் கூட்டமைப்பினர் கையில் எடுத்துள்ளனர் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய...

2026-08-18 17:17:50
news-image

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை!

2026-08-18 16:47:33
news-image

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார்...

2026-08-18 16:37:09
news-image

கண்டி - பதீயத்தலாவ வீதியில் விபத்து...

2026-08-18 16:33:40
news-image

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!

2026-08-18 16:19:02
news-image

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்...

2026-08-18 15:46:42
news-image

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை...

2026-08-18 14:42:57
news-image

பிரித்தானிய Global Marine Systems நிறுவனத்துக்காக...

2026-08-18 14:55:41
news-image

இலங்கை - லிதுவேனியா இடையிலான 30...

2026-08-18 14:34:59
news-image

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை...

2026-08-18 14:54:30
news-image

கொழும்பு பேராயருடனான இலவச செயற்பாட்டு மையத்தின்...

2026-08-18 14:48:29
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர்...

2026-08-18 13:42:24