கோடரியால் மனைவி தாக்கியதில் மதுபோதையிலிருந்த கணவன் பலி

05 May, 2020 | 08:03 PM
image

(செ.தேன்மொழி)

ஹாலி-எல  பகுதியில் கணவனை கோடரியால் தாக்கிய மனைவி கணவன் உயிரிழந்ததையடுத்து பொலிஸில் சரணடைந்துள்ளார். 

ஹாலியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரங்கல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், 36 வயதுடைய அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையிலிருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதுடன், இது மோதலாக மாறியதை அடுத்தே மனைவி தனது கனவனை கோடரியால் தாக்கியுள்ளார்.  கணவன் உயிரிழந்ததை அறிந்த மனைவி பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே முரண்பாடுகள் காணப்படுவதாவும், இதன் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right