கொரோனா வைரஸ் பரவலினால் அமுல்படுத்தப்பட்ட பூட்டல் நடவடிக்கைகள் காரணமாக ஸ்பெய்னின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலையற்றவர்களின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் 280,000 க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதன்படி ஸ்பெய்னில் வேலையற்றவர்களின் எண்ணிக்கையானது 282,891 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு சமூக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாவினால் அதிகளவாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெய்னில் இதுவரை 248,301 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 25,428 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

Photo Credit : CNN