உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இந்நிலையில், உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 இலட்சத்தை தாண்டிவிட்டது.

அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியளித்துள்ளார்.ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த தடுப்பூசியை தாமதமின்றி விரைவிலேயே கண்டுப்பிடித்து பாவனையில் அறக்குவோமெனவும் தெரிவித்துள்ளார்.