(எம்.மனோசித்ரா)

மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் ,இன்றிலிருந்து ஆங்காங்கு மாலை அல்லது இரவு வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். இதன் போது ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார், புத்தளம், குருணாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் மிகுந்த அவதானமுடைய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.